ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்
" alt="" aria-hidden="true" />
பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாலை ஒரம் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்து உணவுகளை வழங்கினர்.
இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமலும் பணிக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். மேலும் தினக்கூலி மற்றும் சாலை ஒரம் வசிக்கும் ஏழைகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாப்பிரெட்டிப்பட்டி இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதிகளில் உள்ள ஏழை எளிய மற்றும் தினக்கூலி செய்து வரும் நபர்களை தேர்வு செய்து கடந்த ஒரு வாரம் காலமாக அவர்களுக்கு தேவையான மதிய உணவுகளை இளைஞர்களே ஒன்றிணைந்து சமைத்து சாலை ஒரம் மற்றும் ஏழைகளுக்கு தேடி சென்று வழங்கி வருகின்றனர்